விஜய் டிவியில் மறுபிரவேசம் செய்கிறார் டிடி

விஜய் டிவியில் மறுபிரவேசம் செய்கிறார் டிடி

சமீப காலமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காணாமல் போயிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளினி டிடி ஆயுத பூஜையில் இருந்து மீண்டும் தரிசனம் தரவிருக்கிறார்.

divya-darshini is back - actoractressin

இடையில் சில காரணங்களால் விஜய் டிவி நிகழ்ச்சிகள் எதிலும் தலை காட்டாத திவ்யதர்ஷினி தற்போது மீண்டும் காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். சமீபத்தில் இதற்காக நடிகர் விக்ரம் மற்றும் சமந்தா ஆகியோரை வைத்து காபி வித் டிடி நிகழ்ச்சியை படம் பிடித்திருக்கின்றனர். இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் டிடி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆயுத பூஜை தினத்தில் சீயான் விக்ரம் மற்றும் சமந்தாவின் கலந்துரையாடலை காணத் தயாராகுங்கள் என்று இந்தத் தகவலை விஜய் டிவியும் உறுதி செய்திருக்கிறது.

Source : tamil.filmibeat.com

You may also like...

%d bloggers like this: