விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 5 நிகழ்ச்சி – ஆனந்த்

கேரளாவைச் சேர்ந்த ஆனந்த், சூப்பர் சிங்கர்! பரிசு – ரூ. 75 லட்சம் மதிப்புள்ள வீடு!

சூப்பர் சிங்கர் 5 நிகழ்ச்சி - actoractressin

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளராக கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ரூ. 75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற சூப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள். இவர்களில் பரீதாவும் ராஜகணபதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனந்த், சியாத், லட்சுமி ஆகியோர் கேரளா.

தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்கிற அடைமொழியுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் பாடகர்கள் கலந்துகொள்வார்கள். அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கேற்பார்கள்.

இந்தமுறை இறுதிச்சுற்றில் போட்டியிடும் 5 பேரில் மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். எனவே எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் போட்டியை வெல்லப் போகிறார் என்கிற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டது. சமூகவலைத்தளங்களிலும் சூப்பர் சிங்கரின் இறுதிச்சுற்று பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டது. பரீதா, ஆனந்த், சியாத் ஆகிய போட்டியாளர்களுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து பதிவுகள் எழுதினார்கள்.

தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி இரவு 1 மணி வரை நீண்டது. ஆலுமா டோலுமா பாடலைப் பாடிய ராஜகணபதி தான் இந்தப் போட்டியை வெல்வார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் அவருடைய இந்தப் பாடலுக்குத்தான் ரசிகர்களும் நடுவர்களும் அதிக வரவேற்பு அளித்தார்கள். ஆனால், ராஜ கணபதிக்கு நடுவர்களின் விருது மட்டுமே கிடைத்தது. வாக்குகளின் அடிப்படையில் ஆனந்த் முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடம் பரீதாவுக்குக் கிடைத்தது. லட்சுமி, சியாத் ஆகியோர் கடைசி இரு இடங்களைப் பிடித்தார்கள்.

முதலிடம் பிடித்த ஆனந்துக்கு ரூ. 75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

முதல் இரு இடங்களைப் பிடித்த ஆனந்த், பரீதாவுக்கு சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உறுதி அளித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் 5 முடிவுகள்

1. ஆனந்த்

2. பரீதா

3. ராஜ கணபதி (நடுவர் விருது)

4. லட்சுமி

5. சியாத்

சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள்:

சூப்பர் சிங்கர் 1

நிகில் மேத்யூ (கேரளா)

சூப்பர் சிங்கர் 2

அஜீஸ் (தமிழ்நாடு)

சூப்பர் சிங்கர் 3

சாய் சரண் (தமிழ்நாடு)

சூப்பர் சிங்கர் 4

திவாகர் (தமிழ்நாடு)

சூப்பர் சிங்கர் 5

ஆனந்த் (கேரளா)

Source : www.dinamani.com

You may also like...

%d bloggers like this: