செத்துப் போன கெளதம் – பூஜா.. சிதறிப் போன நெஞ்சங்கள்.. பரபரப்பில் “வாணி ராணி”!
வாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு நேற்று அதிர்ச்சி நாள்.. அவர்கள் இது நாள் வரை ரசித்துப் பார்த்து வந்த கெளதம் – பூஜா ஜோடியை நேற்றைய அத்தியாயத்தோடு கொன்று விட்டனர். ஆம், கெளதமும், பூஜாவும் தற்கொலை செய்து கொண்ட காட்சி நேற்று இடம் பெற்று நேயர்களை அதிர வைத்து விட்டது. என்னதான் சீரியல்கள் மக்கள் மனதைக் கெடுக்கிறது என்று சொன்னாலும் கூட அதை தங்களது வாழ்க்கையின் அங்கமாகத்தான் டிவி நேயர்கள் பலரும் பார்க்கிறார்கள். அந்த வகையில் தமிழ் டிவி நேயர்களை அதிகம் கவர்ந்த ஒரு தொடர் வாணி ராணி. இந்தத் தொடரின் கேரக்டர்களுக்கு தனி ரசிகர்களே இருக்கிறார்கள். ஆனால் நேற்று அத்தனை வாணி ராணி ரசிகர்களும் அதிர்ந்து போய் விட்டனர்.. கெளதம் பூஜா முடிவைப் பார்த்து.
வாணி மகன் கெளதம் இந்த சீரியிலில் வாணியாக வரும் ராதிகாவின் மகன்தான் கெளதம். இவரது மனைவிதான் பூஜா. கெளதம் வேடத்தில் நடித்து வந்தவர் விக்கி கிருஷ். பூஜா வேடத்தில் வந்தவர் நவ்யா.
Read more at: http://tamil.filmibeat.com/television/vani-rani-serial-takes-new-turn-with-gowtham-pooja-s-suicide-034702.html