தமிழ் சீரியல்களில் டபுள் ஆக்‌ஷன் மோகம்!!!

எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுதேப்பா…!

தமிழ் சீரியல்களில் இப்போது டபுள் ஆக்‌ஷன் மோகம் தலைவிரித்தாடுகிறது என்றே கூறலாம். அந்தளவிற்கு எல்லா சீரியல்களிலும் யாராவது ஒருவர் டபுள் ஆக்‌ஷனில் வருகின்றனர். சினிமாவிற்கு இணையாக சீரியல்களும் வளர்ந்து வருகின்றன. வாரம் ஒரு நாள் என ஒளிபரப்பப்பட்டது போய், இன்று ஒவ்வொரு சேனலிலும் தினமும் குறைந்தபட்சம் 10 மெகா தொடர்களாவது ஒளிபரப்பாகின்றன. அதோடு சினிமாக்கள் போலவே பாடல், சண்டை போன்றவைகளும் சீரியல்களில் இடம்பெறுகின்றன. இந்நிலையில், சமீபகாலமாக சீரியல்களில் டபுள் ஆக்‌ஷன் கதாபாத்திரங்கள் அதிகரித்துள்ளன.

டபுள் ஆக்‌ஷன் மோகம் - actoractressin
வாணி ராணி… ஏற்கனவே வாணி ராணி சீரியலில் ராதிகா இரண்டு வேடங்களில் வருகிறார். ஒருவர் துணிச்சலான வக்கீலாகவும், மற்றொருவர் வெகுளியான பெண்ணாகவும் என வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்கள்.

வம்சம்… வம்சம் சீரியலில் சொல்லவே வேண்டாம். பெரும்பாலானவர்கள் அதில் இரண்டு கதாபாத்திரங்களில் வருவர். நாயகி ரம்யா கிருஷ்ணன், அவரது கணவர் – அப்பா டபுள் ஆக்ஷன் என நீள்கிறது.

டபுள் ஆக்‌ஷன்… நாயகி ரம்யாகிருஷ்ணனுக்கு சக்தி, அர்ச்சனா என இரண்டு கதாபாத்திரங்கள். அவரது குழந்தை, கணவர், அத்தை ஆகியோரும் டபுள் ஆக்‌ஷன் தான்.

புதிய முத்து… தற்போது இந்த வரிசையில் அக்கதையில் முத்து என்ற கதாபாத்திரத்தில் வரும் ரம்யாகிருஷ்ணனின் தம்பியும் இணைந்துள்ளார். முத்து போன்றே உள்ள மற்றொருவர் யார், எப்படி அவர் முத்து போன்றே உள்ளார் என்பதற்கான விடையை வரும் எபிசோடில் எதிர்பார்க்கலாம்.

இது தான் வழக்கம்… இந்த சீரியலில் இவ்வாறு ஒரே தோற்றத்தில் திடீரென முளைக்கும் நபரை, எப்படியாவது தலையைச் சுற்றி காதைத் தொட்டு, சம்பந்தப்பட்ட கேரக்டருக்கு உறவு முறையாக்கி விடுவது வழக்கம்.

அண்ணனா, தம்பியா? அந்தவகையில், அர்ச்சனாவைக் கொல்ல வந்து, சக்தியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அந்நபர், எப்படியாவது முத்துவிற்கு அண்ணனாகவோ, தம்பியாகவோ தான் இருப்பார் என நிச்சயமாக நம்பலாம்.

வள்ளியிலும்… இதேபோல், சன்டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் வள்ளி சீரியலில் தற்போது நாயகி வள்ளி திடீரென டபுள் ஆக்‌ஷனில் வருகிறார். அவரைப் போலவே வரும் இன்னுமொருவர் கண் பார்வையற்றவராக பாவப்பட்ட பெண்ணாக வருகிறார். என்ன கொடுமை என்றால் வள்ளி கதையின் போக்கே மொத்தமாக மாறி விட்டதுதான்.

தொடரும்..? டபுள் ஆக்‌ஷனிற்கு மக்கள் தரும் ஆதரவைத் தொடர்ந்து இனி வரும் நாட்களில் மேலும் சில சீரியல்களிலும் இதே பார்முலாவை எதிர்பார்க்கலாம்.

You may also like...

%d bloggers like this: