சன் டிவியில் கேன்சலான பிரியமானவள், வாணி ராணி

மழையால் மக்களுக்கு இப்படியும் ஒரு நன்மை… சன் டிவியில் கேன்சலான பிரியமானவள், வாணி ராணி
சன் டிவியில் கேன்சலான பிரியமானவள் - வாணி ராணி - actoractressin
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை கொட்டித்தீர்த்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை மழை வெள்ளம் புரட்டிப்போட்ட நிலையில் சினிமா, சீரியல் படப்பிடிப்புகளும் கடந்த ஒருவாரமாகவே நடைபெறவில்லை. இதனால் சன்டிவியில் சில சீரியல்கள் நேற்று ஒளிபரப்பாகவில்லை. அடாது மழையிலும் விடாது சீரியல் பாக்கும் மக்களுக்கு இது சற்றே ஏமாற்றத்தை அளித்தது என்றே கூறவேண்டும். மழை… அடை மழை… இது விடாத மழை… இது கனமழை… பேய்மழை… என்று டி. ராஜேந்தர் பாணியில் சொல்லும் அளவிற்கு 40 மணிநேரம் கொட்டியது கனமழை. ஏரி, குளங்கள் நிரம்ப, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்க, சென்னை நகரை கபளீகரம் செய்தது வெள்ளம். குடியிருப்புகளின் கீழ் பகுதிகளை வெள்ளம் மூழ்கடிக்க இரண்டாவது மாடி, மொட்டைமாடி என தஞ்சமடைந்தனர் மக்கள். டிவி, ப்ரிட்ஜ், என பல வீட்டு உபயோகப் பொருட்களை விட்டு விட்டு உடுத்திய துணியோடு வெளியேறியவர்கள் பலர். மின்சாரம் இல்லை, பால் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை என பல இல்லைகளுக்கு மத்தியில் உயிராவது மிஞ்சியதே என்று அழுதுகொண்டே வெளியேறினர் மக்கள். விடாத மழையில் படப்பிடிப்புகளை நடத்த முடியவில்லை. இதனால் சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சூட்டிங் முடிந்து தயாராக இருந்த பல சிரியல்களிலும் டப்பிங் பேச ஆட்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது.

Source : Oneindia

You may also like...

%d bloggers like this: