புதுமுக நாயகனுடன் இனியா நடிக்கும் காதல் சொல்ல நேரமில்லை

புதுமுக நாயகனுடன் இனியா  நடிக்கும் காதல் சொல்ல நேரமில்லை

“காதல் சொல்ல நேரமில்லை”

ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் ராமாபுரம் ராஜேஷ் வழங்க ஸ்ரீசினி கிரியேசன்ஸ் பட நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “ காதல் சொல்ல நேரமில்லை” என்ற படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் உதய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக இனியா நடிக்கிறார்.மற்றும் கஞ்சாகருப்பு, இளையராஜா, FMS.நடராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Iniya Upcoming movie

ஒளிப்பதிவு    –   C.H.ராஜ்குமார்

எடிட்டிங்      –   R.T.அண்ணாதுரை

இசை         –   குமார்பாண்டியன்

ஸ்டன்ட்      –    மிரட்டல் செல்வம்

நடனம்       –   ஸ்ரீதர், C.சிவா

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி தயாரித்து இயக்குகிறார் ஸ்ரீநிவாசன்.

படம் பற்றி இயக்குனர் ஸ்ரீநிவாசனிடம் கேட்டோம்….

இது ஒரு ஜாலியான கதை! கதாநாயகன் ஒரு பிளேபாய் பார்க்கிற எல்லா பெண்களையும் வசப்படுத்தி விட வேண்டும் என்று நினைபவன். உடன்படாத பெண்களையும் தான் வளைத்து விட்டதாக பொய் சொலிக்கொண்டிருப்பான். அந்த பிளேபாய்த் தனம் எப்படியெல்லாம் அவனது வாழ்கையை பாதிக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம்.

படப்பிடிப்பு சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.

You may also like...

%d bloggers like this: