ரஜினியின் ‘கபாலி’ பாடல்கள் பட்டியல் வெளியீடு!

ரஜினியின் ‘கபாலி’ பாடல்கள் பட்டியல் வெளியீடு!
kabali photos gallery - kabalaiorgin 05
கபாலி படத்தின் இசை இணையதளத்தில் ஜூன் 12-இல் வெளியாகிறது. இதன் பாடல்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்து வரும் படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருகிறது. படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், சென்னையில் ஜூன் 12-இல் பிரம்மாண்ட விழா நடத்தி, கபாலி பட பாடல்கள் வெளியிடப்படுவதாக இருந்தது.

அமெரிக்காவில் ரஜினி:

இதனிடையே ரஜினிகாந்த் அமெரிக்காவில் தன் குடும்பத்தினருடன் கோடை விடுமுறையைக் கழித்து வருவதால், அவர் சென்னைக்கு திரும்பும் தேதி உறுதி செய்யப்படவில்லை.

இதனால் இசை வெளியீட்டை விழாவாக நடத்தாமல் நேரடியாக இணையதளம் மூலம் வெளியிட படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, அதே தேதியில் இணையதளத்தில் பாடல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரமலான் மாதம் என்பதால் படம் வெளியாகும் தேதி ஜூலை 1 என்பதிலும் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில் கபாலி படப் பாடல்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Source : www.dinamani.com

You may also like...

Leave a Reply

%d bloggers like this: