ரஜினியின் ‘கபாலி’ பட வெளியீடு தள்ளிப் போகிறதா?
ரஜினியின் ‘கபாலி’ பட வெளியீடு தள்ளிப் போகிறதா? தாணு தரப்பு சொல்வது என்ன?
பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் பிரான்ஸ் திரையரங்கமான ரெக்ஸ் சினிமாஸில் ஜூலை 14 அன்று திரையிடப்படவுள்ளது. இத்தகவலை ரெக்ஸ் சினிமா அறிவித்துள்ளது. பாரிஸில் உள்ள இந்தத் திரையரங்கம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அரங்கம் ஆகும். ஒரே சமயத்தில் 2800 அமர்ந்து படம் பார்க்கமுடியும். ஜூலை 14 அன்று பிரீமியர் காட்சி நடைபெற உள்ளதால் அடுத்தநாள் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
ஆனால், சமீபத்தில் வந்த தகவல்களின்படி, படம் இன்னும் ஒருவாரத்துக்குத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாணு தரப்பு கூறும்போது, படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை. ஆனால், அதற்கு முன்பே வெளியீட்டுத் தேதி குறித்து பேசுகிறார்கள். இது விதிமுறைக்கு எதிரானது. படம் தணிக்கை ஆனபிறகே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்கள்.
Source : www.dinamani.com