சர்ச்சையில் கபாலி போஸ்டர்!

தயாரிப்பாளர் தாணு கோபம்! – சர்ச்சையில் கபாலி போஸ்டர்

கபாலி படத்துக்காக ரஜினி ரசிகர்கள் வடிவமைத்த போஸ்டர் ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கபாலி போஸ்டர் - kabaliorgin
ரசிகர்களின் போஸ்டர், இர்பான் கான் நடித்த ஹிந்திப் படமான மடாரி-யின் போஸ்டரைப் போலவே இருந்ததால், இதுகுறித்து இர்பான் கானிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், எனக்கு அந்த போஸ்டரைப் பற்றித் தெரியாது. நாங்கள் சிறிய அளவில் படம் எடுப்பவர்கள். எங்கள் படத்தின் போஸ்டரைப் போலவே ரஜினி பட போஸ்டரும் வடிவமைக்கப்பட்டதைப் பார்த்தேன்.

எங்கள் படத்தின் போஸ்டரையும் அவர்கள் படத்தின் போஸ்டரையும் பாருங்கள். இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர் படத்தையும் பாருங்கள். எங்கள் படத்தையும் பாருங்கள் என்றார். இரண்டு படப் போஸ்டர்களிலும் உயரமான கட்டடங்களின் பக்கவாட்டில் நாயகனின் முகம் உள்ளதுபோல வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் மடாரி போஸ்டர், அதிகாரபூர்வமானது. கபாலியின் போஸ்டர், ரசிகர்களால் வடிவமைக்கப்பட்டது.

இதனிடையே இந்தச் செய்தியை ஆங்கில ஊடகம் ஒன்று ட்விட்டரில் வெளியிட்டபோது அதற்கு கபாலி படத் தயாரிப்பாளர் தாணு கோபத்துடன் பதிலளித்தார். அவர் கூறியதாவது:

உங்கள் தகவலைச் சரிபார்த்துக்கொள்ளவும். அது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. அது அதிகாரபூர்வமானது அல்ல என்று கூறினார்.

Source : www.dinamani.com

You may also like...

Leave a Reply

%d bloggers like this: