“கபாலி வெளியாகும்போது ரஜினி சென்னை திரும்புவார்’

“கபாலி வெளியாகும்போது ரஜினி சென்னை திரும்புவார்’
கபாலி வெளியாகும்போது ரஜினி சென்னை திரும்புவார் - kabaliorgin

மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள ரஜினிகாந்த், கபாலி வெளியீட்டின்போது சென்னை திரும்புவார் என்றார் அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ்.

கபாலி படம் வெற்றி பெற வேண்டியும், ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டியும் தஞ்சாவூர் பெரியகோயிலில் சத்தியநாராயண ராவ் திங்கள்கிழமை வழிபாடு நடத்தினார். முன்னதாக திருநாகேசுவரம், சூரியனார்கோயில், திருபுவனம் கோயில்களுக்குச் சென்றுவிட்டு தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வந்த அவர் பெருவுடையார், பெரியநாயகி சன்னதிகளில் வழிபாடு நடத்தினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

கபாலி திரைப்படம் ஜூலை 15-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்தப் படம் நன்றாக உள்ளது. நிச்சயமாக வெற்றி பெறும். ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் நலமாக இருக்கிறார். கபாலி படம் வெளியீட்டின்போது அவர் கண்டிப்பாக சென்னை வருவார். அரசியலில் ஈடுபடுவது குறித்து அவரே முடிவு செய்வார். நான் எதுவும் சொல்ல முடியாது. நதி நீர் இணைப்புக்காக அவர் கொடுப்பதாகக் கூறிய 1 கோடி ரூபாய் வங்கியில் வைப்புத்தொகையாக வைத்துள்ளார். பணிகள் தொடங்கியவுடன் அவர் சொன்னதுபோல கொடுத்துவிடுவார் என்றார் சத்தியநாராயண ராவ்.

Source : www.dinamani.com

You may also like...

Leave a Reply

%d bloggers like this: