கபாலி ரசிகர்களுக்கு ஏர்-ஏசியா வழங்கும் சிறப்பு விருந்து

 கபாலி ரசிகர்களுக்கு ஏர்-ஏசியா வழங்கும் சிறப்பு விருந்து

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் வெளியாகும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையிலும் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கபாலி ரசிகர்களுக்கு ஏர்-ஏசியா வழங்கும் சிறப்பு விருந்து - kabaliorgin

இந்நிலையில், இப்படத்தின் ஏர்லைன் பார்ட்னராக இணைந்திருக்கும் ஏர் ஏசியா நிறுவனம் ‘கபாலி’ ரசிகர்களுக்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஏற்கெனவே, மலேசியாவில் வசிப்பவர்கள் ‘கபாலி’ படத்தின் ஸ்டைலில் வீடியோ படம் எடுத்து அனுப்பினால், வெற்றி பெறுபவர்களுக்கு சென்னையில் வந்து ‘கபாலி’ படத்தை தனது நண்பருடன் பார்க்கும், சென்னையில் மூன்று நாட்கள் தங்கும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக வெளியிட்டது.

தற்போது, இந்தியாவில் உள்ளவர்களுக்கான போட்டி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதில், பங்குபெறுவோர் ‘கபாலி’ ஸ்டைலில் வீடியோ ஒன்றை எடுத்து, ஏர்-ஏசியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் வெளியிட்டால், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பாங்காக் அல்லது கோலாலம்பூர் செல்ல விமான டிக்கெட் வழங்குகிறது. இந்த மூன்று வெற்றியாளர்களுக்கு மட்டுமே வழங்கிறது.

மேலும், இந்த போட்டியில் வெற்றி பெறும் 10 நபர்களுக்கு சென்னையில் ‘கபாலி’ படத்தை முதல்நாள் முதல் காட்சியே பார்க்கவும் ஏற்பாடு செய்கிறது. ஏர்-ஏசியா நிறுவனம் வழங்கிய இந்த சிறப்பு போட்டி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி ஜுலை 8-ந் தேதி வரை மட்டுமே நடைபெறுகிறது.

Source : www.maalaimalar.com

You may also like...

Leave a Reply

%d bloggers like this: