கபாலி பட முன்னோட்டம்
கபாலி பட முன்னோட்டம்
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள படம் ‛கபாலி’. ரஜினி இளம் கலைஞர்களுடன் கை கோர்த்துள்ளார். பாட்ஷா படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு டான் ரோலில் ரஜினி நடித்துள்ளார்.
மலேஷியாவில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக போராடுபவராக ரஜினி நடித்துள்ளார். இளமைகால ரஜினி, 50வயது ரஜினி என இரண்டு விதமான கேரக்டரில் ரஜினி நடித்திருக்கிறார். படத்தின் பெரும்பகுதி மலேஷியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், கிஷோர், நாசர், வின்ஸ்டன் சாவோ, ரித்விகா, ஜான் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், முரளி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் படத்தொகுப்பு வேலையை கவனித்துள்ளார். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாய் தயாரித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளை தாண்டி மலாய் மொழியிலும் கபாலி படம் வெளியாக இருக்கிறது. ஜூலை மாதம் திரைக்கு வர இருக்கும் கபாலி, தமிழகத்தில் மட்டும் சுமார் 800 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.
Source : www.dinamalar.com