கபாலி படத்தின் கதை என்ன?

கபாலி படத்தின் கதை என்ன?

வயதான வேடத்தில் ரஜினி 20 நிமிடங்களே தோன்றுவார்: ‘கபாலி’ கதை பற்றி இயக்குநர் பா. இரஞ்சித்

கபாலி படம் - kabaliorgin

 

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். கபாலி படத்தின் டீசர் முதலில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

பிறகு படத்தின் புதிய பாடல் டீசரும் வெளியிடப்பட்டது. நெருப்புடா பாடலின் டீசர். ரஜினியின் வழக்கமான ஸ்டைலில் காட்சிகள் இருந்ததைக் கண்டு ரசிகர்கள் பரவசமடைந்தார்கள்.

கபாலி படத்தின் தெலுங்குப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இயக்குநர் பா. இரஞ்சித் செய்தியாளர்களிடம் பேசும்போது கபாலி பற்றிய பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

 

ரஜினியை மனத்தில் கொண்டு கபாலி படத்தின் கதையை எழுதினீர்களா?

கதைக்கு ஏற்றாற்போலவே என் கதாநாயகனைத் தேர்வு செய்வேன். அதற்கு நேர்மாறாக அல்ல. ஒரு கதாநாயகனை மனத்தில் கொண்டு எப்படி கதை அமைப்பது என எனக்குத் தெரியாது.

 

கபாலி படத்தின் கதை என்ன?

ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் மலேசியாவுக்குக் குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் கபாலீஸ்வரன். மலேசியாவில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்துப் போராடுபவராகவும் டானாகவும் ரஜினி நடித்துள்ளார். கபாலி என்றால் கெட்ட மனிதர்களின் பெயராக இருந்துவந்ததை இந்தப் படத்தில் மாற்றியுள்ளேன். 2 கெட்-அப்களில் ரஜினி தோன்றுவார். அவருடைய இளமையான தோற்றத்துக்காக 1978-ல் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் அவர் தோன்றியதை வைத்து வடிவமைத்தேன்.

ரஜினியின் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றம் மிகவும் புகழ்பெற்றுவிட்டது.  வயதான கதாபாத்திரத்தில் அவர் 20 நிமிடங்களே தோன்றுவார். மற்றபடி அவர் இளமையான தோற்றத்தில் தான் படத்தில் வருவார். கபாலி படத்தில் ஆக்‌ஷன் மட்டும் இருக்காது. உணர்வுபூர்வமான காட்சிகளும் உண்டு. மக்களால் அவற்றுடன் தங்களை இணைத்துக்கொள்ளமுடியும்.

Source : www.dinamani.com

 

You may also like...

Leave a Reply

%d bloggers like this: