கபாலியை வாங்கிய ஜாஸ் சினிமாஸ்

கபாலியை வாங்கிய ஜாஸ் சினிமாஸ்

இன்னும் ஒரு சில நாட்களில் கபாலி படத்தின் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆக இருக்கிறது. அதாவது கபாலி படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 15 என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. என்றாலும் இன்னும் படம் சென்சாருக்கு செல்லவில்லை என்பதால் ரிலீஸ் தேதியை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறார் தாணு.

கபாலியை வாங்கிய ஜாஸ் சினிமாஸ் - kabaliorgin

இன்னொரு பக்கம், கபாலி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இந்த வார இறுதியில் முடிவடைந்ததும் சென்சாருக்கு படத்தை அனுப்ப திட்டமிட்டிருக்கிறாராம் தயாரிப்பாளர் தாணு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உலகமெங்கும் வெளியாகவிருக்கும் ‘கபாலி’ படத்தின் வியாபாரம் குறித்து வரும் செய்திகள் திரையுலகினரை மலைக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவலின்படி, ‘கபாலி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விநியோகத்துறையில் கடந்த வருடம் கால் பதித்த ‘ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனம் வெளியிட்ட முதல் திரைப்படம் அஜித் நடித்த ‘வேதாளம்’. அதோடு சமீபத்தில் வெளியான ‘இறைவி’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ ஆகிய படங்களின் சென்னை வெளியீட்டு உரிமையையும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனமே வாங்கியது. இப்போது மிகப்பெரிய தொகை கொடுத்து ‘கபாலி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கி இருக்கிறதாம் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்.

Source : www.dinamalar.com

You may also like...

Leave a Reply

%d bloggers like this: