‘கபாலி’யின் புதிய பாடல் டீசர் குறித்து தாணு!
ரஜினி ரசிகர்களுக்கு விருந்து: ‘கபாலி’யின் புதிய பாடல் டீசர் குறித்து தாணு!
லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் முதலில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இன்றிரவு 8 மணிக்கு கபாலி படத்தின் அடுத்த டீசர் வெளியிடப்படுகிறது. இத்தகவலை தயாரிப்பாளர் தாணு, ட்விட்டர் வழியாகத் தெரிவித்துள்ளார். ‘கபாலி படத்தின் பாடல் டீசரை இன்றிரவு 8 மணிக்கு வெளியிடுகிறேன். அது நிச்சயம் தலைவர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.