விஜய்சேதுபதி – ரம்யா நம்பீசன் நடிக்கும் புது படம்

வாசன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்திற்கு, ஊடக நண்பர்களாகிய நீங்கள் ஆதரவளித்து ஊக்குவிப்பதன் மூலம் திரைத்துறையில் எங்கள் நிறுவனத்திற்கு ஓர் அங்கீகாரத்தையும் நற்பெயரையும் உருவாக்கி தர கோருகிறோம்.மேலும் உங்களின் ஒத்துழைப்பு அணைத்து வெற்றிக்கும் காணிக்கையாக இருக்கும் என நம்புகிறோம்.

எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படமான  பெயர் சூட்டப் படாத இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய திரு.எஸ்.யூ.அருண்குமார் இயக்குகிறார். இது அவர் இயக்கும் இரண்டாவது படம் ஆகும்.

காக்கிச்சட்டைக்கு உரிய கம்பீரத்தையும், நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு போலீஸ்காரனின் யதார்த்த கதைதான் இந்த படம்.     கதையின் நாயகனாக விஜய்சேதுபதி மற்றும் நாயகியாக ரம்யாரம்பீசன் நடிக்கவிருகின்றனர்.

ஒளிப்பதிவு   –   தினேஷ்கிருஷ்ணன் /    இசை   –  நிவாஸ்.கே.பிரசன்னா

படத்தொகுப்பு    –   ஸ்ரீகர்பிரசாத் /   கலை –   பாலசந்தர்

சண்டை   –  அன்பறிவ் ( அன்பு & அறிவு ) ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களும் இனணந்து பணியாற்ற உள்ளனர்.  தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: