Million Dollar Arm – A.R rahman Upcoming Hollywood Project – Latest News
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது Million Dollar Arm என்ற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை Craig Gillespie என்பவர் இயக்குகிறார். Jon Hamm, Aasif Mandvi, Bill Paxton, Suraj Sharma, Lake Bell, Alan Arkin ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மே மாதம் 16ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தின் பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு தமிழ்ப்படத்தின் பாடலை பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து சித்ராவும், உன்னிகிருஷ்ணனும் பாடிய ஒரு பாடலின் மெட்டை இந்த படத்திற்காக ரஹ்மான் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஆல்பம் வரும் மே மாதம் 13ஆம் தேதி நியூயார்க்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் பிரபல நிறுவனமான வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது.
For more latest cinema News, Information, Photos stay with us by Like us in Facebook https://www.facebook.com/Actoractress.in , Follow us in Twitter https://twitter.com/actoractress_in & any feedback, suggestions, complaints feel free to contact us. Our support email id is admin@actoractress.in