ஜிப்ரான் – உத்தம வில்லன் – ஜில்

ஜிப்ரான்

இசையமைப்பாளர் ஜிப்ரான் மென்மையான சிரிப்பும், தன்மையான பேச்சை கொண்டவர் சமீபத்தில் தமிழில் வெளிவந்த ‘உத்தம வில்லன்’, தெலுங்கில் வெளிவந்த ‘ஜில்’ படங்களின் இசைக்கு ரசிகர்கள் தந்த ஆதரவைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல் ஹாசனின் அடுத்த இரண்டு படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தனது வெற்றிக்கு துணை நிற்கும் அனைத்து ரசிகர்களுக்கு நன்றி பாட கடமைப்படுள்ள இவர் கூறியதாவது.

“ இசை கலை இறைவன் எனக்களித்த வரம். நல்ல இசையால் மக்களை சந்தோஷப் படுத்துவதே எனது முதன்மை குறிக்கோளாய் வைத்துள்ளேன். ‘உத்தம வில்லன்’ மற்றும் ‘ஜில்’ திரைபடங்களின் இசைக்கு கிடைத்த அமோக ஆதரவைக் கண்டு நான் மலைத்து போனேன்.”

“ரசிகர்களின் அதரவு எனது நம்பிக்கையையும் உயர்த்தியுள்ளது மேலும் எனது  கலைக்கு இருக்கும் பொறுப்புகளை எனக்கு உணர்த்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழியிலும் என்னை ஆதரித்து உத்வேகம் ஊட்டிய அனைத்து ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் இதயம்கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.” என்றுக் கூறியுள்ளார்.

“மேலும், எனது சகோதரர் அமித் இயக்கியுள்ள ‘இராஜதந்திரம்’ படத்தை வெற்றி படமாய் மாற்றிய ரசிகர்களுக்கும், துணை நின்ற ஊடக துறை நண்பர்களுக்கும் அவரது சார்பாக இத்தருணத்தில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்று பெருமிதத்துடன் கூறினார்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: