வானவில் வாழ்க்கை ‘கானா’ சிவா

‘நட்புக்கு ஒரு கானா பாட வந்தேன்’ – வானவில் வாழ்க்கை ‘கானா’ சிவா

இன்றைய தமிழ் சினிமாவில் கானா பாடல்கள ஒரு தனி பெரும் இடத்தை பெற்றுள்ளது. வழக்கமாக சந்தோஷத்தை கொண்டாடும் தருணங்களிலும், தோல்வியால் வருந்தும் நேரங்களிலும் ஒரு போதை நேர பாடலாகவே கானா பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் இடம் பெறுகின்றன. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வெளிவரும் ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தில் ‘கானா’ ராஜா என்ற கதாப்பாத்திரத்தில் தோன்றி நட்பின் அர்த்ததை கூறும் வகையில் அமைந்துள்ள கானா பாடலை இயற்றி பாடியுள்ளார் ‘கானா’ சிவா.

“ இசைக்கு மொழி, இனம், நாடு என்ற பேதமில்லை என்பது போல். எந்த ரகமும் இல்லை எந்த இசையாக இருந்தாலும் ரசிப்பவர்களை மகிழ்விக்கும். சிறு வயதிலிருந்தே அனைவரையும் கிண்டல் செய்ய சிறிய சிறிய பாடல்களை எழுதி பாடியது. பின் கல்லூரி பேருந்துகளில் நண்பர்கள் சந்தோஷமாக கூடி பாட ஆரம்பித்தது இன்று ஜேம்ஸ் சார் மூலமாக படத்தில் நடித்து, பாடி கூடவே இப்பாடலுக்கு ஆடியும் இருக்கிறேன். ”

“ஒரு கல்லூரி விழாவில் தனியார் கல்லூரியில் பயிலும் ‘பீட்டர்’ பசங்கள களாய்க்கும் வகையில் ஓரு பாடல் வேண்டும் என்று ஜேம்ஸ் சார் கேட்டார். அப்படி நானே எழுதி பாடியது தான் ‘கல்ச்சரல்ஸ் வந்திருக்கும்’ என்ற கானா பாடல். வெறும் கிண்டல் மட்டும் இல்லாமல் நட்புக்குள் காசு பணம் பெரியதல்ல’ என்ற கருத்தும் வேண்டும் என்று எண்ணி அதையும் கூறியுள்ளேன். எல்லா பசங்களுக்கும் இந்த படமும் என் பாட்டும் பிடிக்கும்..” என்று கூறினார் பாடகர்/நடிகர் கானா சிவா.

Youtube Link:

You may also like...

Leave a Reply

%d bloggers like this: