நடிகர் விஜய் 60- வது படம் பைரவா

60- வது படம் பைரவா…. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய் #bairava

Vijay 60 வது படம் பைரவா - actoractress.in

சென்னை: நடிகர் விஜய்யின் 60-வது படம் பைரவா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார்.

விஜய்யின் 60-வது படத்தின் தலைப்பு குறித்து ஏகப்பட்ட ஹேஸ்யங்கள் ரெக்கை கட்டி பறந்தன. பரதனின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கான தலைப்பு தளபதி-60, விஜய்-60, தளபதி என்றெல்லாம் கூறப்பட்டன.

இந்த படத்துக்கான தலைப்பு அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 5-ந் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று சமூக வலைதளங்களில் விஜய்யின் படம் பைரவா என்று கசிந்தது. பர்ஸ்ட் லுக் படங்களும் கூட வெளியாகி இருந்தன.
bairava first look - actoractress.in
இந்த நிலையில் நடிகர் விஜய் தம்முடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய படத்தின் பெயர் பைரவா என்பதை அறிவித்து போஸ்டர்களையும் ரிலீஸ் செய்திருக்கிறார்.

‘பைரவா’வை இப்போதே பல்லாயிரக்கணக்கில் ஷேர் செய்து கொண்டாடி மகிழ்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

Source : www.tamil.oneindia.com

You may also like...

Leave a Reply

%d bloggers like this: