திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்!

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார்!

lyricist Na Muthukumar
பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உடல்நிலை குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 41.

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் இன்று நா.முத்துக்குமார் காலமானார். இவர் ஆனந்த யாழை மீட்டுகிறாள், அழகே அழகே ஆகிய பாடல்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். மேலும் பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி, உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவரது மனறவுக்கு திரைப்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் நா.முத்துக்குமார் சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டவர், தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். இவர் மாற்றான், 7ஜி ரெயின்போ காலனி, வெயில், நாடோடிகள், புதுப்பேட்டை, சந்திரமுகி, மதராசபட்டினம், நண்பன் உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு பாடல்களை இயற்றிவுள்ளார்.

முத்துக்குமாரின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Source : http://ns7.tv/ta/song-writer-namuthukumar-passed-away-due-illness.html

You may also like...

Leave a Reply

%d bloggers like this: