சினிமா கிரிக்கெட் – கூட்டம் குவியவில்லை!!!

சினிமா கிரிக்கெட்.. இந்த கூட்டத்தை வைத்து சங்கத்துக்கு கக்கூஸ் கூட கட்ட முடியாதே!

சினிமா கிரிக்கெட் - actoractressin

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு நடிகர்கள் எதிர்பார்த்த அளவு கூட்டம் குவியவில்லை என்பதால் நடிகர் சங்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். வீடுகளிலும் கூட மக்கள் இந்த கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க ஆர்வம் காட்டவில்லை. ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் இணைந்து இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியைத் துவங்கி வைத்தனர்.

ஒருசிலரைத் தவிர மொத்த கோலிவுட் நடிகர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டுள்ளனர். எனினும் நடிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மைதானத்தில் கூட்டம் குவியவில்லை. பல நாட்களாக விளம்பரம் செய்து, முன்னணி நடிகர்கள் ஒன்று திரண்டும் கூட இப்போட்டியைக் காண மக்கள் முன்வரவில்லை. இதற்குக் காரணம் இந்த கிரிக்கெட் போட்டியில் நடிகர் சங்கத்தின் சுயநலம் மட்டுமே அடங்கியுள்ளதாக பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பி பேஸ்புக் உள்ளிட்டவற்றில் பிரசாரத்தில் குதித்ததே. ஸ்டேடியத்தின் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே காணப்பட்டன. வெயிலும் அதிகம் என்பதால் யாரும் இந்தப் போட்டி குறித்து ஆர்வம் காட்டவில்லை. இதனால் நடிகர் சங்கம் எதிர்பார்த்த அளவுக்கு இந்த கிரிக்கெட் போட்டி அவர்களுக்கு கைகொடுக்குமா? என்பது சந்தேகம்தான்.

நட்சத்திரக் கிரிக்கெட்: ரஜினி, கமல் ஆஜர்!

நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை ரஜினி, கமல் இருவரும் தொடங்கி வைத்தனர். நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சற்றுமுன் தொடங்கியது.சுமார் 8 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டியில் 8 அணிகளின் கேப்டன் மற்றும் அணிகளின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

சினிமாவின் 2 முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். முதல் போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியை எதிர்த்து சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணி ஆடுகிறது.

சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. முன்னதாக 8 அணிகளில் யார், யாருடன் மோதுவது என்பதை கமல், ரஜினி இருவரும் இணைந்து தேர்வு செய்தனர். நகைச்சுவை நடிகர்களான எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பாலாஜி, சின்னி ஜெயந்த் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

You may also like...

%d bloggers like this: