கடைசி வரை வாக்களிக்க வராத அஜீத்!
கடைசி வரை வாக்களிக்க வராத அஜீத்!
நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இதோ வந்துவிட்டார்.. அதோ வந்துவிட்டார் என்று அவ்வப்போது பரபரப்பு கிளப்பிய அஜீத், கடைசி வரை வாக்களிக்க வரவே இல்லை. காலை 7 மணிக்கு ஆரம்பித்த நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. பெரும் பரபரப்பும் உணர்ச்சிமயமான காட்சிகளும் நிறைந்ததாக இருந்த இந்த தேர்தலில், காலையிலேயே வந்து வாக்களித்துவிட்டுச் சென்றுவிட்டனர் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர்.
வேதாளம் படத்தின் டப்பிங்கில் பிசியாக இருந்ததாலும், சங்கம் மீது கொண்ட அதிருப்தியாலும் அஜீத் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷாலின் பண்டவர் அணியும், சரத்குமார் தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது.
நேற்று ஏராளமான நடிகர், நடிகைககள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், விஜய்யும் காலையிலேயே வந்து வாக்களித்துவிட்டு சென்றனர். ‘தல’ அஜீத் முந்தைய நாள் இரவு 3 மணிவரை வேதாளம் படத்தின் டப்பிங்கில் பிசியாக இருந்தாராம். அதனால் மதியத்திற்கு மேல் அவர் வாக்களிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கடைசி வரை வாக்களிக்க வரவே இல்லை. வாக்குச்சாவடியில் இரு அணியினருக்கும் இடையே நடந்த மோதலை பார்த்து அஜீத் அதிருப்தி அடைந்தாராம். மேலும் தான் சிக்கலில் இருந்த போது சங்கம் உதவவில்லையே என்ற அதிருப்தி வேறாம். இதனால் தான் அவர் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Source tamil.oneindia.com