இந்திய சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட்

இந்திய சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட்
நடிகர் சங்க கட்டிட நல நிதி - actoractressin

நடிகர் சங்க கட்டிட நல நிதிக்காக ஸ்டார் கிரிக்கெட் போட்டி ஒன்றை அடுத்த மாதம் நடத்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் முடிவெடுத்திருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் தற்போது செய்து வருகிறார்கள். இந்த கிரிக்கெட்டி போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளப் போவதாக நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிரிக்கெட் போட்டியை இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்க நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளதாம். அதனால் மற்ற மொழி நடிகர்களுடனும் பேசி வருகிறார்கள்.

இந்திய அளவில் சூப்பர் ஸ்டார்களாக அவரவர் மொழிகளில் பார்க்கப்படும் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மம்முட்டி, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் போட்டிக்காக சென்னை வர உள்ளதாகத் தெரிகிறது. தென்னிந்தியத் திரையுலகமே ஒரு காலத்தில் சென்னையில் இருந்துதான் நடைபெற்று வந்தது. அமிதாப்பச்சன் கூட பல ஹிந்தித் திரைப்படங்களின் படப்பிடிப்புக்காக சென்னையில் வந்து கலந்து கொண்டிருக்கிறார்.

இப்படி பல மொழி சூப்பர் ஸ்டார்கள் வந்து கலந்து கொண்டால் ஸ்டார் கிரிக்கெட் போட்டி பிரமாதமாக நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆனால், அஜித்குமாரை மட்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வைத்தால்தான் நடிகர் சங்கத்திற்கு முழுமையான வெற்றி கிடைக்கும் என்பதே உண்மை. ஓட்டுப் போடவும் வராமல், பொதுக்குழுவிற்கும் வராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அஜித்குமாருக்கு எதிராக தற்போது நடிகர் சங்கத்தில் கடும் எதிர்ப்புகள் நிலவி வருவதாகத் தெரிகிறது.

மற்ற மொழி நடிகர்களுக்கு இருக்கும் உணர்வு அஜித்குமாருக்கு வருமா என்பதே தற்போதைய கேள்வி ?.

You may also like...

%d bloggers like this: