அஜீத் படம் மூலம் மீண்டும் இணையும் கவுதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ்
சென்னை: அஜீத் நடிக்கும் புதிய படத்தில் கவுதம் மேனனுடன் மீண்டும் இணைகிறார் ஹாரிஸ் ஜெயரராஜ்.
ஆரம்பம் படத்துக்குப் பிறகு ஏ எம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். இந்தப் படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலேயிலிருந்து வாரணம் ஆயிரம் வரை இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா ஆகியோருடனும் பணியாற்றினார் கவுதம் மேனன்.
இப்போது அஜீத் படத்துக்காக மீண்டும் ஹாரீஸ் ஜெயராஜுடன் கை கோர்த்துள்ளார்.
அஜீத் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுவே முதல் முறை.
Source: OneIndia Entertainment