மார்ச் 7,மகளிர் தினத்தை முன்னிட்டு, “டேக் கேர் இந்தியா”

மார்ச் 7,மகளிர் தினத்தை முன்னிட்டு,
“டேக் கேர் இந்தியா” நிறுவனம் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை அண்ணா நகர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் கடந்த
7-ம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காவல் துறை உயர் அதிகாரி
ஷ்கில் அக்தர்,ஆச்சி குழுமம் நிறுவனர் பதம்சிங் ஐஸக் ,சமுக ஆர்வலர் நசிமா மாரிய்க்கர்,
இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா,டெக்கான் கிரானிகில் நிர்வாக ஆசிரியர்
பகவான் சிங், சென்னை மெட்ரோ மாலை நாளிதழ் நிறுவனர் திரு.வசீகரன்
“THE GREEN MAN OF INDIA” அப்துல் கனி மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்டனர்.

நடிகை பத்மஸ்ரீ மனோரமா மற்றும் மருத்துவர் P.S.ஸ்ரீமதி அவர்களுக்கு
வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட்டது
நடிகை மனோரமா இல்லத்திற்க்கு சென்று “டேக் கேர் இந்தியா” நிறுவனர்
திரு.மொஹமத் இப்பிராஹிம் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா
அவ்விருதினை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில்
சிறந்து விளங்கும் பெண்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டன.
“எழுச்சி ஏற்படுத்தும் மகளிர் விருது” மற்றும் “இளைஞர்களின் அடையாளம்
விருது” என்ற தலைப்பில் வழங்கப்பட்டது.

இறுதியில் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை மையபடுத்தி குறும்படமொன்று
வெளியிடப்பட்டது.இந்த படத்தை புதுமுக இயக்குனர் திரு.பிரவீன் இயக்கியுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி “டேக் கேர் இந்தியா” தலைவர் திரு.யூசப் அவர்கள் தொடங்கிவெய்த்தார்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: