Anushka Sharma Celebrating her Birthday with Virat Kohli – Bollywood News
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனில் ஒருவர் வீராட் கோலி. ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்து தங்களது காதலை வெளிப்படுத்தி வந்தனர்.
அனுஷ்கா சர்மா தனது 26–வது பிறந்த நாள் விழாவை நாளை (மே1–ந்தேதி) கொண்டாடுகிறார். அவர் தற்போது ராஜஸ்தானில் படபிடிப்பில் உள்ளார். அங்கு தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். இதில் வீராட் கோலி கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் முடிந்த அவர் நேற்று நாடு திரும்பினார். இந்தியாவில் அவரது அணி விளையாடும் ஆட்டம் 4–ந்தேதி நடக்கிறது. ஐதராபாத் அணியை பெங்களூர் மைதானத்தில் சந்திக்கிறது. இதற்கு இன்னும் 4 நாட்கள் இருப்பதால் வீராட்கோலி காதலியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க ராஜஸ்தான் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
For more latest cinema News, Information, Photos stay with us by Like us in Facebook https://www.facebook.com/Actoractress.in , Follow us in Twitter https://twitter.com/actoractress_in & any feedback, suggestions, complaints feel free to contact us. Our support email id is admin@actoractress.in