மறைந்தார் மனோரமா!
மறைந்தார் மனோரமா… திரையுலகினர், தலைவர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
பழம்பெரும் நடிகை மனோரமா உடலுக்கு தலைவர்கள்,
திரைத்துறையினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி
வருகின்றனர்.-தமிழக அரசு சார்பில் மனோரமா உடலுக்கு
அமைச்சர்கள் அஞ்சலி .
மனோரமாவின் உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி
-மனோரமாவின் குடும்பத்தாருக்கு விஜய் ஆறுதல்
மனோரமா மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் -மனோரமாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு: ஜெயலலிதா -யாரைப் பற்றியும் புறம்பேசாதவர்.
மனோரமா: வைரமுத்து -என்னைப் பொறுத்த வரை ஒரு பாடகி மறைந்துவிட்டார் -ஆச்சி நடித்த கதாபாத்திரங்களில் எனக்கு பிடித்தது ஜில் ஜில் ரமாமணி தான் .
புறம்போசாதீர்கள் என்ற செய்தியை விட்டுச் சென்றுள்ளார் ஆச்சி. நன்றாக இருந்த மனோரமாவுக்கு நேற்று இரவு 11 மணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது – பேரன் ராஜராஜன் .
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நினைவை இழந்தார் – ராஜராஜன்.
மனோரமா உடலுக்கு அமைச்சர் வளர்மதி, செல்லூர் ராஜூ
அஞ்சலி செலுத்தினர் .
ஜனாதிபதி மாளிகையில் மனோரமாவை பார்த்து ஆச்சி என
அழைத்த அப்துல் கலாம் -எப்படி ஆச்சி ஆயிரம் படத்தில்
நடித்தீர்கள் என ஆச்சரியமாக கேட்ட அப்துல் கலாம் .
மனோரமா உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி
‘ஆச்சி’மனோரமாவின் இறப்பு திரையுலகிற்கு பேரிழப்பு: ஸ்டாலின் .
தமிழ் சினிமாவின் பெண் சிவாஜியாக திகழ்ந்தவர் மனோரமா: எஸ்.வி.சேகர் .
மனோரமாவின் புகழ் கடைசி வரை நிலைத்து நிற்கும்:
டி.ஆர் -உலகளவில் மனோரமாவைப் போல் சிறந்த நடிகை
இல்லை: டி.ராஜேந்தர் -மனோரமா உடலுக்கு டி.ராஜேந்தர் அஞ்சலி
-மனோரமாவின் ரசிகனாகவே இருந்து வருகிறேன்: டி.ராஜேந்தர்
மறைந்த நகைச்சுவை அரசி மனோராமாவின் உடல் இன்று மாலை தகனம் -மயிலாப்பூர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் – பேரன் தகவல் -மனோரமாவின் உடலுக்கு நடிகர், நடிகையர், தலைவர்கள் இறுதி அஞ்சலி .
என் தாயே இறந்து போய் விட்டார் – நடிகர் மனோபாலா உருக்கம்
இனிமேல் இப்படி ஒரு நடிகையைப் பார்க்கவே முடியாது –
மனோபாலா .
என்னை வியக்க வைத்த மாபெரும் நடிகை மனோரமா – சுகன்யா நெகிழ்ச்சி .
Source : tamil.oneindia