நடிகை மனோரமா உடல் தகனம் செய்யப்பட்டது

நடிகை மனோரமா உடல் தகனம் செய்யப்பட்டது

மனோரமா  actoractressin

தமிழ் சினிமாவின் பழம் பெரும் நடிகையான மறைந்த மனோரமா உடலுக்கு முதல்வர் ஜெ., தி.மு.க, தலைவர் கருணாநிதி, திரையுலக நடிகர்கள் , நடிகைகள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் .இவரது உடல் இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மகன் பூபதி இறுதிச்சடங்குகளை செய்தார். இதில் நடிகர் சரத்குமார் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு நடிகை மனோரமாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்த மனோரமா நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார் . நேற்று ( 10 ம் தேதி ) இரவு காலமானார். இன்று தி.நகரில் உள்ள அவரது வீட்டில் தமிழ் திரையுலக நடிகர்கள் அனைவரும் மனோரமா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

ஜெ, கருணாநிதி அஞ்சலி : தமிழக முதல்வர் ஜெ ., தி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன், இந்திய கம்யூ., கட்சியை சேர்ந்த தா பாண்டியன், நல்லக்கண்ணு, மார்க் கம்யூ கட்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன், மாநில பா.ஜ, தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், திருமாவளவன், குமரி ஆனந்தன், உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் – நடிகைகள் கண்ணீர் அஞ்சலி:

நடிகர் ரஜினிகாந்த், சிவக்குமார், விஜயகாந்த், ராதாரவி, ஏ வி எம் சரவணன், வெண்ணிற ஆடை மூர்த்தி, தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, ராமராஜன் , கவுண்டமணி, செந்தில், கோவைசரளா , சரத்குமார், ராதிகா, பார்த்திபன், பாக்யராஜ், பாண்டியராஜன், டி. ராஜேந்தர், விக்ரமன், வாசு, அஜீத், ஷாலினி , விஜய், விஷால், கார்த்தி, ராகவா லாரன்ஸ் மன்சூர் அலிகான், குஷ்பு, சுந்தர் சி, தியாகு, விக்னேஷ் , கருணாஸ், சச்சு, சினேகா, பிரசன்னா, லட்சுமி, பழம்பெரும் நடிகை காஞ்சனா , பொன்வண்ணன், இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் , எஸ்.வி. , சேகர் வடிவுக்கரசி, ரகுமான், சி.ஐ.டி., சகுந்தலா, குண்டு கல்யாணம், ஆர்த்தி கணேஷ் உள்ளிட்ட பலர் மனோரமா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இரங்கல் செய்தியில் புகழாரம் : மனோரமா மறைவுக்கு நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தியில் மனோரமா மறைவு ஈடு செய்ய முடியாதது என புகழாரம் சூட்டியுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ; ஆச்சி மனோரமாவின் மறைவு, தமிழ்த்திரைப்படத்துறைக்கு பெரும் இழப்பு. நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து சாதனை படைத்தவர் . அவரது இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது, அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் . இவ்வாறு ஜெ., குறிப்பிட்டுள்ளார்.

மனோரமா ஒரு மேதை தான் : ஜெ., புகழாரம்

மனோரமா உடலுக்கு முதல்வர் ஜெ., நேரில் அஞ்சலி செலுத்தி நிருபர்களிடம் பேசுகையில்: மனோராமாவுக்கும் , எனக்கும் நல்ல ஒரு பாசம் உண்டு , அவர் மீது எனக்கு அலாதி பிரியம் உண்டு, சிவாஜி கணேசன், மனோராமாவை ஒரு ஜீனியஸ் என்று என்னிடம் கூறுவார், அவர் ஒரு மேதைதான், சிவாஜி போல் மனோரமா ஒரு நடிகையர் திலகம், இது போன்ற சாதனையாளர் இது வரை யாரும் பிறக்கவில்லை . இனி பிறக்க போவதுமில்லை, அவரது வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

அன்பும், பண்பும் நிறைந்தவர் மனோரமா – கருணாநிதி
கதாநாயகியாகத்தான் நடிப்பேன் : மனோரமா, மதிக்கப்படுவருக்கும் , நேசிப்பவருக்கும் இடையில் வேறுபாடு உண்டு , இவர் மீது நான் வைத்த மதிப்பும், நேசமும் அதிகம், அவர் யாரையும் புறம் பேசியதில்லை, இதனை இளைய தலைமுறையினர் எல்லாரும் பின்பற்ற வேண்டும், அவர் நடிக்காத படங்கள் கிடையாது, அவர் நடித்த படம் பட்டியலிடப்படுவதைவிட 1960 – 1970 களில் அவர் நடிக்காத படம் தான் பட்டியலிட வேண்டும், அவர் அடைந்த உயரம் இன்னொரு நடிகைக்கு வாய்க்காது, 57 ஆண்டுகள் பணியாற்றி , பழகியுள்ளார். மாலையிட்டமங்கை வந்தபோது மனோரமா கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்ற எண்ணத்தில் இருந்தார் மனோரமா. ஆனால் கண்ணதாசன் அவருக்கு சில அறிவுரை வழங்கினார் .அதாவது கதாநாயகியாக நடித்தால் சில தூரம் மட்டும் பயணிக்க முடியும், நகைச்சுவை நடிகையாக இருந்தால் காலம் தோறும் பணியாற்றலாம் என கண்ணதாசன் கூறியதை ஏற்று அவர் நடித்தார், இது தான் அவரது நீண்ட கால திரை வாழ்வுக்கு சக்தியாக இருந்தது . சமீபத்தில் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது, ஒரு திரைப்படம் குறித்து பேசிய போது, அவரது வெட்கப்பட்ட புன்னகை இன்றும் எனது நினைவில் நிற்கிறது.

நகைச்சுவை சினிமாவின் தாய் கமல்: நடிகர் கமல்ஹாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் நகைச்சுவை சினிமாவின் தாய் மற்றும் தந்தையர்களாக நடிகை மனோரமா மற்றும் நடிகர் நாகேஷ் விளங்கிவந்தனர். நகைச்சுவை திரையுலகம் தந்தையை இழந்த தவிப்பு ஆறுவதற்குள், தற்போது தாயையும் இழந்திருக்கிறது. நாகேஷ் மற்றும் மனோரமாவுடன் இணைந்து நடித்தது நான் செய்த புண்ணியம் என்றே நினைக்கிறேன். இருவர்களுடனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளேன். சினிமா மூத்த பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக மனோரமாக வந்து அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கினார். பின் அவர் கூடியிருந்த பார்வையாளர்களின் ஒப்புதலுடன் கருணாநிதி எழுதிய 3 பக்க வசனத்தை படிக்கவா என்று என்னிடம் அனுமதி கேட்டார். எனக்கு உடனே கண்ணில் தாரை தாரையாக தண்ணீர் வந்துவிட்டது. மனோரமா அவர்கள் எங்கே. நான் எங்கே. என்னிடம் போய் தாங்கள் அனுமதி கேட்பதா? என்று கேட்டுவிடலாமா என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். அந்த 3 பக்க வசனத்தையும் எவ்வித குறிப்பும் எடுத்தும் பார்க்காமல், அப்படியே கட கட என்று பேசினார். அவரின் நினைவுத்திறன் கண்டு வியந்துபோனேன். 1000 படங்களில் நடித்துள்ளதே, அவரின் இந்த கூர்மையான நினைவுத்திறனுக்கு காரணம் என்று அப்போது தெரிந்துகொண்டேன். நான் இக்கட்டான நிலையில் இருக்கும்போதெல்லாம், என்னை அருகில் உட்காரவைத்து ஆறுதல் சொல்வார். அவரிடம் பேசியவுடனே, ஒரு தெளிவு பிறந்துவிடும். என்னுடைய வளர்ச்சியில் பெரும்பங்குவகித்தவர் என்றமுறையில் நான் அவரிடம் எல்லையில்லா பாசம், மரியாதை கொண்டுள்ளேன். அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்ற செய்தி என்னை மட்டுமல்லாது, ஒரு ஒட்டுமொத்த திரையுலகிற்கே பெரும் இழப்பு செய்தி ஆகும்.

மேலும் பலரது இரங்கல் செய்தி வருமாறு:

* பாட்டி சொல்லை தட்டாதே என்ற படத்தை மனோரமா தான் நடிக்க முடியும் , தில்லானா மோகனம்பாள் படத்தில் மனோரமா நடிப்பை பார்த்து சிவாஜியே நம்மை மிஞ்சி விடுவாரோ என்று நினைத்துள்ளார் . – சிவக்குமார்

* சகாப்தம் முடிவைடைந்திருக்கிறது, அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை அவர் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அவர் நிற்பார் – நாசர்

* ஈடு செய்ய முடியாத இழப்பு நடிகர் சங்கம் மற்றும் கலைக்குடும்பம் சார்பில் அஞ்சலி செலுத்தி கொள்கிறேன் .- சரத்குமார்

* இவரை போல் ஒரு நடிகை இனி வரமுடியாது, அவருடைய பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது – ராதிகா

* அவர்களின் சாந்தமான சொரூபம் மறக்க முடியாது, அவரிடம் இருந்த அன்பு போல் யாரிடமும் அவர் கோபிக்க முடியாது, இவர் திரையுலகத்திற்கு தாய் – கோவை சரளா .

You may also like...

%d bloggers like this: