காதலில் ஹாட்ரிக் அடிப்பாரா நயன்தாரா? – Latest Tamil Cinema News
சிம்பு, பிரபுதேவா என்று தொடர்ந்து இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா, தற்போது மீண்டும் ஒரு நடிகரின் காதல் வலையில் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
கோடம்பாக்கத்தின் தற்பொதைய பெரும் பரபரப்பு செய்தியாக பரவி வரும் இந்த செய்தியின் நாயகன் கணேஷ் வெங்கட்ராம் தான். சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் கணேஷ் வெங்கட்ராம், ஜெயம் ரவி நடிக்கும் ‘தனியொருவன்’ படத்தில் நயன்தாராவின் நெருங்கிய நண்பராக நடிக்கிறாராம். படத்தில் நெருக்கம் காண்பித்த இவர்கள் தற்போது நிஜத்திலும் நெருக்கமாக பழகுவதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் பரவ, இதை அறிந்த நயன்தாரா பெரும் கோபாப்பட்டாராம்.
தன்னைப் பற்றி இப்படி வதந்தி பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க, நயன்தாராவின் இந்த புது காதல் வெற்றி பெறுமா அல்லது தோல்வியடைந்து அவருக்கு ஹாட்ரிக் கிடைக்குமா, என்று சில நடிகைகள் கூட்டம் போட்டு நக்கல் பேசி வருகிறார்களாம்.
For more latest cinema News, Information, Photos stay with us by Like us in Facebook https://www.facebook.com/Actoractress.in , Follow us in Twitter https://twitter.com/actoractress_in & any feedback, suggestions, complaints feel free to contact us. Our support email id is admin@actoractress.in