மீண்டும் சர்ச்சையில் சிம்பு- அனிருத்

கெட்ட வார்த்தைகளுடன் ஒரு பாடல் ரிலீஸ்… மீண்டும் சர்ச்சையில் சிம்பு- அனிருத்
Actor Simbu has sung along with composer Anirudh fierce controversy - actoractressin

இசையமைப்பாளர் அனிருத்துடன், நடிகர் சிம்பு இணைந்து பாடிய பாடலொன்று சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நல்ல பாடகர் என்று பெயரெடுத்த சிம்பு தற்போது தான் பாடிய ஒரு பாடலின் மூலம் மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் வந்திருக்கிறார். சிம்புவும், அனிருத்தும் இணைந்து சமீபத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கின்றனர். வழக்கம் போல பெண்களை கேவலப்படுத்தி வந்திருக்கும் இந்தப் பாடலில் காது கொடுத்து கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளை இருவரும் பயன்படுத்தி இருக்கின்றனர்.

இதை விட பாடலின் ஆரம்ப வரிகளே மிகவும் மோசமாக இருப்பதாக வலைதளவாசிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் இப்பாடலை ‘பீப்’ பாடல் என்றே குறிப்பிடுகின்றனர். இந்தப் பாடல் ஏன் வரிகளைக் கூட 18+ மட்டுமே பார்க்க முடியுமாம். நாடு இப்போது இருக்கும் சூழ்நிலையில் இதுபோன்ற பாடல்கள் மிகக் கடுமையான ஈவ்டீஸிங் செய்ய வழிவகுக்கும் என்று பலரும் இந்தப் பாடலுக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source : Oneindia

You may also like...

%d bloggers like this: