பீப் பாடலிற்கும், எனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை- அனிருத்

பீப் பாடலிற்கும், எனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை- அனிருத்
arrest music director Anirudh and actor Simbu beep song - actoractressin

பீப் பாடலுக்கும், தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கூறியிருக்கிறார்.

கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பீப் பாடலுக்கு பொதுமக்கள் பலரும் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தப் பாடலை எழுதி இசையமைத்துப் பாடியதாக கூறப்படும் சிம்பு, அனிருத் இருவர் மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தனக்கும் இந்தப் பாடலுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று இசையமைப்பாளர் அனிருத் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

பீப் பாடல்

கடந்த 10 ம் தேதி அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் ஒன்று இணையதளங்களில் வெளியானது. இப்பாடலைக் கேட்ட மக்கள் பாடலில் உபயோகப்படுத்திய வார்த்தைகளைக் கண்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.அந்த அளவிற்கு மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டிருந்தது.

பிடித்தால் கேளுங்கள் இந்தப் பாடல் பிடித்தால் கேளுங்கள் பிடிக்காவிட்டால் கேட்காதீர்கள் என்று நடிகர் சிம்பு பீப் பாடல் குறித்த சர்ச்சைக்கு சர்ச்சையான ஒரு விளக்கம் அளித்து இருந்தார்.

வழக்குப்பதிவு தற்போது மகளிர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் இருவர் மீதும் பெண்களை அவமானப்படுத்துதல், இழிவுபடுத்துதல் மற்றும் இணையத்தில் ஏற்றுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனிருத் இந்த நிலையில் டொராண்டோவில் இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்த இசையமைப்பாளர் அனிருத் இந்த பீப் பாடல் குறித்து முதன்முறையாக மனந்திறந்திருக்கிறார். “எல்லோருக்கும் வணக்கம். நான் முழுக்க, முழுக்க டொராண்டோ இசை நிகழ்ச்சியில் ஈடுபட்டு இருந்தேன்.இந்த நிகழ்ச்சியை நான் சென்னை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணித்து இருந்தேன்.

எனக்கும் இதற்கும் இந்த நேரத்தில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் .பீப் பாடலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்தப் பாடலை நான் பாடவோ, இசையமைக்கவோ அல்லது பாடலின் வரிகளை எழுதவோ செய்யவில்லை.

இந்த சர்ச்சையில் துரதிர்ஷ்டவசமாக எனது பெயரும் இந்த சர்ச்சையில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. நான் பெண்களின் மேல் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவன். எனது பாடல்களில் நீங்கள் இதனை தெளிவாகக் காணமுடியும்.

எல்லாவற்றிற்கும் இந்த மோசமான சூழ்நிலையில் நான் ஆழமாக அதே நேரம் என்னைப் பற்றிய எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். என்றும் அன்புடன் அனிருத்”. இவ்வாறு தனது அறிக்கையில் அனிருத் தெரிவித்திருக்கிறார். அனிருத்தின் இந்த விளக்கத்திற்கு சிம்புவின் பதில் என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

Source : Oneindia

You may also like...

%d bloggers like this: