சிம்பு, அனிருத் பாடலை சும்மா விடக் கூடாது – பா.விஜய்

சிம்பு, அனிருத் பாடலை சும்மா விடக் கூடாது, தொடர்ந்து எதிர்க்க வேண்டும்- பா.விஜய்

பா விஜய் பீப் பாடலிற்கு எதிராக குரல்  actoractressin

இந்த மாதிரி பாடல்களை தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்று தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞர்களில் ஒருவரும், நடிகருமான பா.விஜய் பீப் பாடலிற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.

சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் தமிழ்நாட்டில் தற்போது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பாடலிற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் அதிகரித்து சிம்பு, அனிருத் இருவர் மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பா.விஜய் இந்தப் பாடல் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த மாதிரி பாடல்களை வேண்டுமென்றே வைரல் ஆகவேண்டும் என்பதற்காக இப்படி சம்மந்தப்பட்டவர்களே லீக் செய்கிறார்கள்.

இதன் மூலம் 10 லட்சம் பேர் கேட்க வேண்டிய இந்த பாடலை,10 கோடி பேர் வரை கேட்கின்றனர். இப்பாடலை எதிர்த்து போராடுபவர்கள் இன்று மட்டுமே குரல் கொடுப்பார்கள் அப்படியிருக்க கூடாது.

தொடர்ந்து இப்பாடலை எதிர்க்க வேண்டும், இனி யாரும் இந்த மாதிரியான பாடல்களை வெளியிட அஞ்ச வேண்டும். மேலும் படங்களுக்கு சென்சார் சான்றிதழ் இருப்பது போல பாடல்களுக்கும் சென்சார் கொண்டுவர வேண்டும்.

சென்சார் கட்டாயம் என்னும் நிலை வந்தால் இந்த மாதிரி பாடல்கள் வெளியாவது கட்டுக்குள் கொண்டு வரப்படும்” என்று பா.விஜய் கூறியிருக்கிறார்.

You may also like...

%d bloggers like this: