ஆபாசப் பாடலுக்காக இன்று கைதாகிறார் சிம்பு!
சென்னை வந்தனர் கோவை போலீசார்… ஆபாசப் பாடலுக்காக இன்று கைதாகிறார் சிம்பு!
பீப் சாங் என்ற பெயரில் ஆபாசப் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் அனிருத்துடன் உருவாக்கி வெளியிட்டு, கடும் எதிர்ப்பு வந்த பிறகு அதற்கு விதவிதமாக விளக்கம் கூறி வரும் சிம்புவைக் கைது செய்ய கோவை போலீசார் சென்னைக்கு வந்துள்ளனர். தமிழ் சமூகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது சிம்புவும், அனிருத்தும் செய்துள்ள வேலை. இளம் கலைஞர்கள் என்று இவர்களுக்கு இத்தனை காலமும் ஆதரவு தந்ததை நினைத்து ஒவ்வொருவரும் அவமானப்பட்டு நிற்கிறார்கள்.
இந்தப் பாடலை உருவாக்கி வெளியிட்டதற்காக இருவரையும் கைது செய்யுமாறு கோவையைச் சேர்ந்த மகளிர் அமைப்புகள் போலீசில் புகார் தந்தனர். அதன்பேரில் அனிருத், சிம்பு இருவர் மீதும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குகள் இவை. இந்தப் புகாரின்பேரில் இருவரையும் கைது செய்ய கோவை போலீசார் இன்று சென்னை வந்தனர். இன்று சிம்புவை அவர்கள் கைது செய்வார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அனிருத் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் அனுப்பியுள்ளார். அவர் வந்ததும் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
Source : Oneindia