பாபி சிம்ஹா நடிக்கும் ‘மசாலா படம்’ இசை உரிமையை வாங்கியது லஹரி மியுசிக்

பாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா நடிப்பில் ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிக்கும் ‘மசாலா படம்’ வேகமாக தயாராகி வருகிறது. புகழ்பெற்ற ஆடியோ நிறுவனமான லஹரி மியுசிக் மசாலா படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்திற்கு புதுமுக  இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.

“ ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘மசாலா படம்’ ஆடியோ உரிமையை பெற்றதில் எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சியடைகிறது. இளம் இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யாவின்  இசை நன்றாக வந்துள்ளது. படத்தின் டிரைலர், டீசர் ஆகியவை பார்த்தேன், இந்த இளம் கூட்டணியின் தயாரிப்பு மிகவும் திருப்தி அளிக்கிறது. லஹரி மியுசிக் தமிழ், தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் லஹரி மியுசிக் ஆடியோ உரிமைகளை பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘மசாலா படம்’ மூலம் தமிழ் இசையுலகில் மீண்டும் வருவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.” எனக் கூறினார் லஹரி மியுசிக்  இயக்குனர் சந்துரு மனோகரன் , .

லஹரி மியுசிக், 90களின் இறுதியில்  இசை உரிமைகள் பெறுவதில் முதன்மை இடத்தில் இருந்த லஹரி நிறுவனம் , தென்னிந்திய திரைப் பட உலகில் நல்ல இசையுள்ள படங்களின் இசை உரிமையைப் பெற்று மீண்டும் தங்கள் பாரம்பரியத்தின் வழி வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: