இந்தியா பாகிஸ்தான் – ‘யூ’ சான்றிதழ்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள ‘இந்தியா பாகிஸ்தான் ‘ ‘யூ’ சான்றிதழ் என தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் நல்ல கதைகளை தேர்ந்து நடித்து வரும் விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு நல்ல படத்தை கொடுக்க தயாராகிவிட்டார்.
‘இந்தியா பாகிஸ்தான்’ ஒரு நகைசுவை காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்ரீ கிரீன் நிறுவனம் வெளியீட்டில் ‘இந்தியா பாகிஸ்தான்’ விரைவில் வெளிவர உள்ளது.