ஜோஸ்டார் Enterprises வழங்கும் ஆகம்

வேகமாக வளர்ந்து வரும் இளம் கதாநாயகன் இர்ஃபானின் அடுத்த படமான ‘ஆகம்’ இன்று பூஜையுடன் தொடங்கியது. ‘ஆகம்’ என்றால் ‘வருகை’ என்று அர்த்தமாம். ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் நிறுவனம் சார்பாக கல்வியாளர் கோடீஸ்வர ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

“ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் நிறுவனம் எடுக்கும் முதல் படம் ‘ஆகம்’ பூஜையுடன் தொடங்கியது.. மனிதத்தையும், தொழில்நுட்ப வளர்ச்சியினையும் ஒருங்கிணைத்து தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு நல்ல சினிமா உருவாக்குவதை கருத்தில் கொண்டு அடியெடுத்து வைத்துள்ளோம்” என்றார் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜா.

“இர்ஃபான். ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், ரவிராஜா மற்றும் அறிமுக நாயகி தீக்ஷிதா நடிக்கும் இப்படத்தை பல நாட்கள் ஆராய்ந்து சிறு சிறு நுட்பங்களை அறிந்து  முனைவர் V விஜய் ஆனாந்த் ஸ்ரீ ராம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.” எனக் கூறினார் கோட்டீஸ்வர ராஜா.

ஜினேஷ் வசனம் எழுத , சதீஸ் குமார் கலையமைப்பில், மனோஜ் கியான் படத்தொகுப்பில் இசையமைக்கிறார் விஷால் சந்திரசேகர்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: