இளம் கதாநாயகன் இர்ஃபான் – ஆகம்

தனது முந்தையப் படங்களில் இலகுவான வேடங்களை ஏற்று நம் மனதில் இடம்பித்த இளம் கதாநாயகன் இர்ஃபான், ‘ஆகம்’ திரைப்படத்தின் மூலம் முற்றிலும் புதியதொரு வேடத்தில் தோன்ற உள்ளார். “ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் சார்பில் கோட்டீஸ்வர ராஜூ தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்குகிறார்.

” ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பிரேம், ரவி ராஜா மற்றும் அறிமுக நாயகி  தீக்ஷிதா என ‘ஆகம்’ தேர்ந்த நதிகளை பெற்றுள்ளது. RV சரண் ஒளிப்பதிவில், மனோஜ் கியான் படத்தொகுப்பில்,  ஜிநேஷ் வசனங்கள் எழுத, சதீஸ் குமார் கலையமைப்பில், விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ”

” ‘ஆகம்’ திரைப்படம் வேலை வாய்ப்பு சந்தையில் நடக்கும் பல கோடி மதிப்பிலான உழலை பற்றிய படம். சோஷியல் த்ரில்லர் பாணியில் வரும் இப்படத்தின் கதை பல வருடத்தின் ஆய்வுக்கு பின் எழுதப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்திற்காகவும், படத்தில் உள்ள அழ்ந்த சமுதாய கருத்துக்காகவும் ஒப்புகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பதிவு தொடங்க உள்ளோம். இப்படத்தில் பிரபல French நடிகை அலியோன முண்டேனு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.” எனக் கூறினார் இயக்குனரும், மாணவர்கள் மத்தியில் பிரபலமான கல்வியாளருமான முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: