விஜய் டிவிக்கு எதிராக கோர்ட்டுக்கு போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்
விஜய் டிவிக்கு எதிராக கோர்ட்டுக்கு போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன் : நடிகையும், சினிமா பட இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளது:
தனியார் ‘டிவி’ சேனலில் நான் நடத்தி வந்த, ஒரு நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி வாயிலாக, பல்வேறு உதவிகளை செய்து உள்ளேன். நீண்ட நாட்களாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்த ஒரு கொலையை துப்புதுலக்கி வெளிச்சத்திற்கு கொண்டு வந்தேன். இந்த நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தும் விதமாக, என் போன்று, ஆண் ஒருவரை வேடமேற்க வைத்து, மற்றொரு தனியார், ‘டிவி’ சேனலில் கேலி செய்கின்றனர்.
அதற்கு அந்த சேனல் நிறுவனம் தான் பொறுப்பு. என் குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும்படி அந்த தனியார், ‘டிவி’ சேனல், ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஒரு பெண் பல முறை கருகலைத்து இருந்தாள். அவளை ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…’ என, தெரிவித்து மன இறுக்கம் போக்கி தவறு என புரிய வைத்தேன். அதை கூட கொச்சைப்படுத்துகின்றனர்.
ஏற்கனவே இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரும் ‘ரஜினி முருகன்’ படத்தில் ஒரு பாடல் இடப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தி உதவிட வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.