நட்சத்திர கிரிக்கெட் போட்டி : உங்க ஹீரோ எந்த அணிக்கு கேப்டன் தெரியுமா…?

நட்சத்திர கிரிக்கெட் போட்டி : உங்க ஹீரோ எந்த அணிக்கு கேப்டன் தெரியுமா…?

ஸ்டார் கிரிக்கெட் - உங்க ஹீரோ எந்த அணிக்கு கேப்டன் தெரியுமா - actoractressin

நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்கத்தில் பதவியேற்ற பின்னர் தனியார் நிறுவனத்திடம் இருந்து சங்க நிலத்தை மீட்டது.

தற்போது அங்கு கட்டிடம் அமைக்க நிதி திரட்டி வருகிறது. இதன் முதற்கட்டமாக “நட்சத்திர கிரிக்கெட் போட்டியை” (CCL) வருகிற ஏப்ரல் 17ஆம் தேதியன்று சென்னையில் நடத்தவிருக்கின்றனர்.

இதில் பங்குபெறும் அணி மற்றும் முழுவிபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த ஒரு பார்வை இதோ…

தமிழகத்தின் முக்கியமான மாவட்டங்களின் பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் எட்டு மாவட்டங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த 6 ஓவர்கள் போட்டியில், ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

அணிகள் பெயர்கள்…

1) ‘மதுரை காலேஜ்’, 2) ‘சென்னை சிங்கம்ஸ்’, 3) ‘நெல்லை டிராகன்ஸ்’, 4) ‘தஞ்சை வாரியர்ஸ்’, 5) ‘திருச்சி டைகர்ஸ்’, 6) ‘ராமநாடு ரைனோஸ்’, 7) ‘கோவை கிங்ஸ்’ மற்றும் 8) ‘சேலம் சீட்டாஸ்’ என்று எட்டு அணிகளுக்கு பெயரிட்டிருக்கிறார்கள்.

அணிகளின் ஸ்டார் கேப்டன்கள்…

இந்த எட்டு அணிகளுக்கும் கேப்டன்களாக சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

எந்த அணிக்கு யார் கேப்டன் என்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் அதுகுறித்து ஓரிரு நாட்களில் தெரிய வரும். அணியின் வீரர்கள் தேர்வும் இதனிடையில் நடைபெற்று வருகிறது.

இந்த ஸ்டார் கிரிக்கெட்டின் விளம்பர தூதர்களாக நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.

இதற்கான தொடக்க விழாவில் ரஜினி, கமல், அமிதாப், விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்பும் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் ரூ. 9 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

You may also like...

%d bloggers like this: