தனியார் தொலைக்காட்சி மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பரபரப்பு புகார்
தனியார் தொலைக்காட்சி மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பரபரப்பு புகார்
‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அதிலும் இவர் பேசிய ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என்ற வசனம் பட்டிதொட்டி எங்கும் பரவியது.
விஜய் டிவியின் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் அவரைக் கிண்டலடித்து நடத்திய ‘சொல்வதெல்லாம் பொய், மேல வைக்காத கை’ என ஒரு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவியைப் பற்றி அவர் பெரிதும் விமர்சிக்கவில்லை.
அதே ‘அது இது எது’ நிகழ்ச்சியில், வரும் சனிக்கிழமை மீண்டும் ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ வெர்ஷன் 2 என ஒன்றை நடத்த உள்ளார்களாம். அதற்கான புரோமோவையும் விஜய் டிவி விளம்பரப்படுத்தி வருகிறது.
இரண்டாவது முறை தன்னையும் தன் நிகழ்ச்சியையும் கிண்டலடிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது பொங்கி எழுந்துள்ளார்.
“விஜய் டிவியே உங்கள் முட்டாள் தனத்தை நிறுத்துகிறீர்களா…பணம் சம்பாதிப்பதற்காக உங்களது கலைஞர்களை வேறு ஏதாவது செய்யச் சொல்லுங்கள். உங்களை நீதி மன்றத்தில் சந்திக்கிறேன். உங்கள் செயல் வெட்கப்பட வேண்டிய செயல். என்னாலும் சில தரமற்ற வார்த்தைகளை பிரயோகிக்க முடியும்” என ஆவேசமாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.