Idhu Namma Aalu Movie ‘Drop. Simbu, Pandiyaraj shock – Latest kollywood News

 

 

Ethi namma aalu

Ethi namma aalu

சிம்பு, நயன்தாரா நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் கிட்டத்தட்ட கிடப்பில் போடப்படும் நிலைக்கு வந்துவிட்டது.

சிம்புவும், நயன்தாராவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக வதந்திகள் பரவின. இந்த வதந்தியை பரப்பிவிட்டதே சிம்புவின் மேனேஜர்கள்தான் என்று நயன் தாராவிற்கு தெரியவந்துள்ளதால், அதிர்ச்சி அடைந்த அவர், இது நம்ம ஆளு படத்திற்கு கால்ஷீட் கொடுக்காமல் தெலுங்கு படங்களுக்கு தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டார். இதனால் சிம்பு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சிம்புவும் வேறு வழியின்றி கவுதம் மேனனின் படத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இது தவிர செல்வராகவன் படத்திற்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்துவிட்டார். இது நம்ம ஆளு இயக்குனர் பாண்டிராஜ், தற்போது அடுத்த படத்தின் டிஸ்கஷ்னுக்கு சென்று வருகிறார். அனேகமாக இது நம்ம ஆளு படம் கிடப்பில் போடப்படும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது.

நயன்தாரா தற்போது தமிழில் நடிப்பதையே தவிர்த்து வருவதாகவும், உதயநிதி ஸ்டாலின் படத்தில் இருந்தும் விலக இருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. தெலுங்கில் மட்டும் அவர் முழு கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

 

For more latest cinema News, Information, Photos stay with us by Like us in Facebook https://www.facebook.com/Actoractress.in , Follow us in Twitter https://twitter.com/actoractress_in & any feedback, suggestions, complaints feel free to contact us. Our support email id is admin@actoractress.in

You may also like...

Leave a Reply

%d bloggers like this: