I will not change to Muslim Religion says Vijay Antony – Kollywood Spot

 

Salim Vijay Antony

Salim Vijay Antony

 

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வெளிவரவுள்ள படம் ‘சலீம்’. இப்படம் குறித்து விஜய் ஆண்டனி பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

‘நான்’ படத்தில் சலீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரத்தின் பெயரைத்தான் இந்த படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறோம். மற்றபடி, இப்படம் ‘நான்’ படத்தின் இரண்டாம் பாகமா? இல்லையா? என்பதை நீங்கள் படம் பார்த்துதான் சொல்லவேண்டும்.

என்னுடைய படத்தின் தலைப்புகள் பெரும்பாலும் இஸ்லாம் மதம் சம்பந்தப்பட்டதாக இருப்பது நான் விரும்பியது அல்ல. எல்லாம் தானாக அமைந்ததுதான். தற்பொழுது சினிமா உலகைச் சேர்ந்த பலர் இஸ்லாம் மதத்துக்கு மாறி வருகின்றனர். அவர்களைப்போல் நானும் இஸ்லாம் மதத்துக்கு மாறப்போகிறேன் என்று சொல்வதெல்லாம் உண்மையில்லை. எனக்கு ஜாதி, மத பேதம் கிடையாது. எனக்கு பிடித்த பாடல் என்னவென்று கேட்டால் ‘ராகவேந்திரா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜனனி ஜனனி’ பாடல்தான் என்று சொல்வேன்.

இனிமேல் நான் நடிப்பில்தான் அதிகம் கவனம் செலுத்தப் போகிறேன். இசையமைப்பாளராக இருப்பதைவிட நடிகராக இருப்பது எளிதாக இருக்கிறது. மற்றவர்களுடன் எளிதாக பழகுவதற்கும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும் நடிப்பு உறுதுணையாக இருக்கிறது. இதனால், இனிமேல் எனது முழுநேர பணி நடிப்பாகத்தான் இருக்கும். நேரம் கிடைத்தால் நான் இசையமைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

For more latest cinema News, Information, Photos stay with us by Like us in Facebook https://www.facebook.com/Actoractress.in , Follow us in Twitter https://twitter.com/actoractress_in & any feedback, suggestions, complaints feel free to contact us. Our support email id is admin@actoractress.in

You may also like...

Leave a Reply

%d bloggers like this: