CSK என்றால் ஒரு தமிழ் திரைப்படம் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா

CSK

CSK ஸ்ரீனிவாசனிடம் இருந்து கை மாறியது என்ற செய்தியை கேட்டவுடன் அது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அல்ல என்று பரபரப்பு அடங்கியது. இருந்தும் CSK என்றால் ஒரு தமிழ் திரைப்படம் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா என்று மூன்று கதாப்பாத்திரங்களின் பெயரின் முதல் எழுத்தே அவை என்று விளங்கியது. படத்தின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. யார் இந்த மூவர் இவர்களுக்குள் என்ன ஒற்றுமை என நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல இயக்குனர் சத்தியமூர்த்தி சரவணனை கேட்டோம். CSK பற்றி அவர் கூறியதாவது.

C­­-சார்லஸ் இளம் கிரிகெட் வீரர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இடம் பெற துடிக்கும் ஒரு விளையாட்டு வீரார்க வருகிறார். வாழ்க்கையில் இந்த நொடியை வாழ்வதும். லட்சியதிற்காக உழைப்பதும் இன்றியமைதது என்று நம்புகிறவன். இக்கதாப்பாத்திரத்தை இனிது இனிது படத்தில் நடித்த ஷரண் ஏற்று நடித்துள்ளார்.

S-ஷஃபிக் நாம் அன்றாடும் சந்திக்கும் இளைஞர்களின் மாதிரி எதை தொட்டாலும் தோல்வி என்று துவண்டு போன நேரத்தில் தவறான வழிகாட்டுதல்களில் சிக்கி தவிக்கும் ஒரு இளைஞன்.

மிஷால் என்ற புதுமுகம் இக்கதாப்பதிரத்தில் நடித்துள்ளார்.

K-கார்த்திகா எதிர்காலத்தை பற்றி எண்ணி நிகழ் காலத்தை வழ மறக்கும் ஒரு இளம் பெண். ‘ஆரோகணம்’ திரைபடத்தில் நடித்த ஜெய் குஹைனி இக்கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.”

“ இப்படி வெவ்வேறு துருவங்களான மூவரின் வாழ்வை மாற்றும் ஒரு நாள் தான் இந்த CSK. நம்மில் பலருக்கு ஒரு நாள் நம் வாழ்வையே மாற்றி அமைத்திருக்கும். அந்த ஒரு நாளை அனைவரையும் நினைவு கூற வைக்கும் இந்த CSK.” என்று கூறுகிறார் புதுமுக இயக்குனர் சத்தியமூர்த்தி.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: