அஜீத் படம் மூலம் மீண்டும் இணையும் கவுதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ்

சென்னை: அஜீத் நடிக்கும் புதிய படத்தில் கவுதம் மேனனுடன் மீண்டும் இணைகிறார் ஹாரிஸ் ஜெயரராஜ்.

ஆரம்பம் படத்துக்குப் பிறகு ஏ எம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். இந்தப் படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

ajith-menon-harrish-jayaraj

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலேயிலிருந்து வாரணம் ஆயிரம் வரை இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா ஆகியோருடனும் பணியாற்றினார் கவுதம் மேனன்.

இப்போது அஜீத் படத்துக்காக மீண்டும் ஹாரீஸ் ஜெயராஜுடன் கை கோர்த்துள்ளார்.

அஜீத் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுவே முதல் முறை.

Source: OneIndia Entertainment

You may also like...

Leave a Reply

%d bloggers like this: